Princiya Dixci / 2015 நவம்பர் 07 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெட்டவைகளைச் செய்வது சுலபமாக இருப்பதனால், அவைகளை இஷ்டமுடன் அள்ளுபவர்கள் அனேகர்.
ஆனால், இவர்களுக்கு இன்னல்களும் வெகு சுலபமாக இணைந்துகொள்ளும். அன்பை, ஆதரவை எந்த வழிகளில் ஈட்டலாம் என்பதை விடுத்து அகம்பாவத்தையும் காழ்ப்பையும் எப்படிப் பிறர்மீது திணிப்பது என்ற தீவிரம் குரூரத் தனமான இயல்பு.
ஆன்மாவின் அழுக்குகளை அழிப்பதே நல்லது. தேவையற்ற சங்கதிகளை விருப்புடன் போடும் இடம் நெஞ்சகம் அல்ல. மனிதப் பெறுமதிகளைக் கூட்டுவதும் குறைப்பதும் அவனவன் செயல்களில் தங்கியுள்ளது.
இறைவன் எதனை விரும்புகிறார் என்பது தெரிந்த ஒன்றுதானே.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .