Princiya Dixci / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைப் பருவம் குதூகலமானது. இதனைக் கண்டு இரசிப்பதை விடச்சிறந்த பேறு வேறில்லை.
ஆனால், நம்மவர்கள் அவர்களின் குதூகலத்தைக் கூறுபோட எண்ணுகின்றார்கள். நாலு வயதுச் சிறார்களுக்கு நாலு கிலோவுக்கு மேல் புத்தகச் சுமையேற்றுகின்றார்கள்.
அவர்களின் சின்னஞ்சிறு மூளைக்குள் அணு விஞ்ஞானி சுமக்கும் கல்விக்கு மேல் அறிவுப் பாரத்தை ஏற்ற முனைகின்றார்கள்.
பிள்ளைகளின் விளையாட்டு நேரம் கல்வியை வளர்க்கத் தாம் பாடுபடுவதாகப் பெருமை பேசுகின்றார்கள்.
ஜீரணிக்கும் திறனுக்கும் மேலாக எதனையும் திணிக்க முடியாது. குஞ்சுகளின் மேல் கொஞ்சமும் இரக்கமின்றி அவர்களின் சுதந்திரத்தை உரிக்க வேண்டாம். பாச மிகுதியால் எதனையும் செய்யமுடியாது.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .