Princiya Dixci / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறப்பே பிணியொரு மயக்கம் எனக்கருதி, மானுட வாழ்க்கைக்கு எதிர்மறை அர்த்தப்படுத்தலை விடுத்துவிடுக.
நாம் வாழும் முறைகளில் துணிச்சலுடன், சத்தியம், நீதி, ஒழுக்கத்தினைக் கடைப்பிடித்தால் எமது வாழ்வில் சுபீட்சம் ஸ்திரமாகிவிடும்.
கோழைத்தனமாகவிருந்து எதையும் சாதிக்கப்போவதுமில்லை. வெறுமை உணர்வு நிறைவைத் தராது. அறியாமைக்குள் ஆனந்தம் கிட்டாது.
நிறைவைத் தேட முனைந்தால், குறைவு வந்திடாது. அறிவை, இறைவன் உருவாக்கியது ஏன் எனத் தெரிந்து கொள்ளாமல் அழுது வடிக்க இடம் கொடுத்தலாகாது.
வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும். துடிப்புடன் விரைந்து எழுக தோழர்களே.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .