Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
படு உற்சாகத்துடனும் களிப்புடனும் ஒருவர் வந்துகொண்டிருந்தார் வழியில் ஒருவர் எதிர்ப்பட்டார்.
'என்ன... உங்களைப் பார்த்தால் உடலில் ஏதோ மாற்றம் உள்ளது போலிருக்கிறது. பருமனேயின்றி மெலிந்து போய், ஆளே அடையாளம் இல்லாமல் தெரிகிறீர்கள். எதற்கும் வைத்தியரை ஒருதரம் சென்று பாருங்கள்' என்றார்.
இவரது பேச்சைக் கேட்டதும் மனிதர் சற்று அதிர்ந்து போய்விட்டார். இவர் சொன்னவை உண்மையாக இருக்குமோ என அஞ்சி, உடனே வைத்தியரை நாடினார்.
வைத்திய பரிசோதனைகளில், அவரது உடல்நிலை மிகவும் நன்றாகவே யிருந்தது. ஆனால், பல ஆயிரம் ரூபாய் செலவுதான் ஏற்பட்டது.
ஒருவரைக் கலவரப்படுத்தும் மனநிலைக்கு உட்படுத்துவது கூட, அவரைக் கொலை செய்தலுக்குச் சமனானது.
கண்டவர் பேச்சையும் மண்டையில் ஏற்க வேண்டாம்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .