2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 16/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருத்து மோதலால் ஒருவருக்கொருவர் எதிரிகளாகிவிடக் கூடாது. ஆனால் இன்று பலர், தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்துச் சொல்பவர்களை பழிவாங்கும் எதிரிகளாகவே கருதுவது மடமைத்தனமானதே.

ஒருவரின் எண்ணம் அவருக்குரியது. அது நல்லதாக இருக்கவும் வேண்டும். மற்றவர்கள் சொல்வது சிறப்பானதாயின் அதனை மறுப்பது மமதை தான்.

அரசியல்வாதிகளில் பலர், தங்கள் கொள்கைகளை முன்னிறுத்தி, 
ஏனையவர்கள் சொல்வதை எள்ளி நகையாடுவதை வழக்கமான பழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

தங்கள் அரசியல் வெற்றிக்கு, இச் செயல் சிறப்பானது என தப்புக்கணக்குப் போடுகிறார்கள்.

கருத்தைச் சொல்ல எவருக்கும் உரிமையுண்டு. மக்களை மந்தைக் கூட்டமாகக் கருதலாகாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .