2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 21/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மமதையும் இரக்கமும் அற்றவர்கள் கூடத் தங்களை வீரர்களாகப் பிரகடனப்படுத்துவதும் உண்டு. இதனை சிலர் நம்பிவிடுவதும் உண்டு.

நல்ல வீரன் அன்பு மயமானவனாகவும் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களை அச்சுறுத்தி அடிமைகொள்ள வைப்பவர்கள் வீரர்களேயல்லர். நீதியை நிலைநாட்டப் போராடுபவனே வீரனுமாவான்.

சண்டியன் போல் சண்டமாருதம் புரிவதும் காசு தேடுவதில் சுயநலத்துடன் இயங்குபவர்களைக் கண்டு அச்சப்பட்டால் சமூகம் உருப்படுமா?

துஷ்டர்களைத் தொலைப்பதற்கு வல்லவர்கள் முன்வரவேண்டும். இல்லாதுவிடின், அவர்களுக்குப் பயந்த பாவம் இந்தச் சமூகத்தையே பழிச் சொல்லுக்கு ஆளாக்கிவிடும். 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .