Princiya Dixci / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிள்ளைகளை ஆளாக்கி, அவர்கள் வாழ்க்கையை அழகு பார்ப்பது, பெற்றோர்களுக்கு நிறைவைத் தரும். உழைக்கும் போதே பிள்ளைகளுக்காகச் சேமித்து, கல்வியுடன் வீடு, காணி எனப் பலவாறு செல்வங்களை அளிக்கின்றனர்.
பெற்ற பிள்ளைகளுக்கு அள்ளி வழங்கும் இவர்கள், தங்கள் இறுதிக்காலத்துக்கென எள்ளவாவது, ஒதுக்கி வைக்காமலிருப்பது, அவர்களை தனித்து வாழும் நிலைக்கே தள்ளித் துன்பப்படுத்திவிடும்.
பிள்ளைகள் மீதான நம்பிக்கை என்பதும், தமக்குத் தாமே ஆதாரம் என்பதும் வெவ்வேறு விடயங்களாகும். மாறும் உலகில் மாறாதது அன்பு என்றாலும், பெற்றோர்கள் தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .