2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 13/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 13 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுடு சொல்லைப் பாவிப்பவர்களுக்கு அது அற்ப சந்தோஷங்களை ஏற்படுத்தலாம். ஆனால், அதனைக் கேட்பவர்களுக்கோ அவை அனலை அள்ளி வீசுவதாக அமையும்.

ஒருவர் மனதை வதைப்பதால் எதனையும் சாதித்து விட முடியாது. எல்லா மொழிகளுமே அழகானது தான். 

ஆனால், அதனை அந்த மொழியே வெட்கப்படும் வண்ணம் பிரயோகித்தலாகாது. புதிது, புதிதான கெட்டவார்த்தைகளைக் கண்டுபிடித்துப் பேச மொழிகள் என்ன பாவம் செய்தன?

நல்ல வார்த்தைகளுக்கு ஏது பஞ்சம்? நஞ்சனை சொற்களை விடுத்துப் பஞ்ச நிகர் மனசுடன் பேசி மகிழ்ந்திருத்தலே அழகு‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .