2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 15/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானத்து வெண்நிலவு உன் வண்ண வதனம் கண்டால் நாணும். வனத்துப் பூக்கள் உனது மேனி வாசனை தேடும். நான் தேடும் சந்நிதி நீ தானே அன்பே‚ உன்னோடு நான் எந்நாளும் இருப்பேன்‚

இவ்வாறு இளமையில் தன் காதிலியை வர்ணித்துப் பேசும் காதலன் திருமணமான பின் சில காலத்தில் பழையதை மறந்து சினந்தும் கொள்கின்றான்.

சில நபர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள். காதலின் இறுக்கத்துக்கு காலம் ஒரு தடையே இல்லை.

எந்தப் பிரச்சினை வந்தாலும் வந்தவனை நிந்திக்கலாகாது. அதேபோல் கொண்டவனைக் கண்டபடி வாயாடிப் பேசவும் கூடாது.

சின்னப் பிரச்சினையில் கரிசனம் காட்டாது, வண்ணமலர்களால் வாழ்க்கைப் பின்னுங்கள்‚ இதுவே தாம்பத்தியத்துக்கு இன்பம் கூட்டும்.

வளரும் காதலே என்றும் நிலைபெறும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .