2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 03/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனும் மனைவியும் தங்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டால் ஒன்றுமே அறியாத தங்கள் பிள்ளைகளை அடித்துத் தங்களது ஆத்திரங்களை வெளிப்படுத்திவிடுவதுமுண்டு.

ஆனால், இத்தகையவர்களில் பலர் சாதாரண நிலையில் பிள்ளைகள் விடும் தவறுகளை கண்டும் அவர்களைத் திருத்த முயற்சி செய்யவே மாட்டார்கள். இன்னும் சிலரோ தங்கள் பிள்ளைகளது தவறுகளை எல்லாம் பிறர் முன் மெச்சிப் புகழ்ந்தும் பேசுவதுண்டு. அவர்கள் செய்வதெல்லாம் குறும்பு என்றும் சொல்லிக் கொள்வதுமுண்டு.

பிள்ளைகள் எதிரே தங்களது போர்க்களக் காட்சிகளை நேரிடையாகக் காட்டவும் கூடாது. தவறு செய்யும் பிள்ளைகளை மெச்சுவதும், அவர்களை கண்டிக்காமல் விடுவதும் நல்லது அல்ல. மனஸ்தாபங்களைத் தனிப்பட்ட முறையில் மனம் விட்டுப் பேசினால் என்ன?

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .