2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 08/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளின் கொஞ்சல், மழலைப் பேச்சுக்கள், அவர்களின் குறும்புடன் கூடிய சேஷ்டைகள், எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவைக்கும் ஜாலங்களாகும்.

இவர்களுடன் கூடிக் கும்மாளமடிப்பது, எமக்குள் புது இரத்தம் பாய்ச்சிவிடும். சோர்வுற்றுச் சதா விரக்தியுடன் இருப்பவர்களுக்கான மாமருந்து, குழந்தைகளுடன் குழந்தைகளாக இருப்பதுவேயாகும். 

வஞ்சனையற்ற பெரியவர்கள் என்றும் குழந்தைகள் போலவே வாழ்ந்து வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். மனசின் பாரத்தை மழலைகளின் குரலோசை இறக்கிவிடும். 

எவர்களையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த நல்லவுள்ளம் பிஞ்சுக் குழந்தைகளுக்கு இருப்பது போலவே, எம்மை அவர்கள் பால் ஈர்க்க வைக்கின்றன.

சின்னப் பிள்ளைகளிடமிருந்தும் போற்றப்படும் இயல்பினை ஏற்று, அவர்களை வாழ்த்தி மகிழ்வீர்களாக.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .