2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 11/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உயர் கல்வி கற்கும் மாணவன் ஒருவரைச் சந்தித்தேன். இந்தக் கல்வி நிலையத்தில் உயர் கல்விக்கான கல்வியைத் தொடர பீட்சா உணவகம் ஒன்றில் மாலை நேரத்தில் வாடிக்கையாளர் தொடர்பாளராகக் கடமைப்புரிவதாகவும் தனது படிப்புக்கான செலவைத் தானே பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலை நாடுகளில் மாணவர்கள் இதே வழியில்தான் முயற்சியுடன் கல்வி கற்கின்றனர். ஆனால், எமது நாட்டிலேயே இவ்வாறு மாணவர் ஒருவர் சொன்னமை எனக்கு சந்தோஷத்தை அளித்தது.

மேற்குறிப்பிட்ட மாணவர் வசதி குறைந்தவருமல்ல. எனினும், தனது சொந்த முயற்சியில் கல்வி கற்பதை பெருமையுடன் சொன்னார்.

பெற்றோரின் நிலைமையறியாது, கண்டபடி செலவு செய்யும் பிள்ளைகள் இத்தகையோரின் முயற்சிகளையும் கண்டுகொள்ளவும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X