2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 15/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிருகங்கள், பிராணிகளிலே கெட்டவை என்று எதுவுமில்லை. அவற்றுக்கு துர்க்குணம் என்று எதுவுமே தெரியாது.

ஆனால், மனிதர்களிடையேதான் கெட்டவர்கள், நல்வர்கள் என்ற பிரிவினர் உள்ளனர். நல்லதை செய்பவர் நல்லவர்கள், கெட்டவைகளைப் புரிபவர்கள் துஷ்டர்களுமாவர்.

ஆனால், விலங்குகள், பிராணிகள் தமக்கான உணவுக்காக மட்டும் இரை தேடுகின்றன. அவை சொத்துக்கள், செல்வங்களை சேர்த்து அடாதவன் காரியங்களை விடாது செய்வதுமில்லை.

அவை தங்கள் பசியைப் போக்க வேட்டையாடுவது அதன் இயல்பு. அதற்கேற்ற உடலமைப்பை ஆண்டவன் அளித்துள்ளான். அவை விவசாயம், தொழில் செய்து பிழைக்க முடியாது. அவை தங்கள் சூழலுக்கேற்ப  வாழுகின்றன. உணவை மட்டும் தேடுகின்றன. தங்கள் உறவுகளுடன் சீவிக்கின்றன. அவ்வளவே. ஹே மானுடா அவை வாழ்விடத்தை சிதைத்துச் சீரழிப்பது நீ தான். திருந்த வேண்டியது நீதான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .