2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 16/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் போராட்டம் எனும் பெயரில் பெரும் சூதாட்டம் செய்கின்றனர். அதாவது, தங்கள் நலனுக்காக பொது மக்களைப் பகடைக் காய்களாக நகர்த்துகின்றனர்.

போராட்டம் என்று கோஷமிடுபவர்களில் பலருக்கு அது எதற்காக எழுதிப் பிடிக்கும் பதாதைகளின் அர்த்தம் புரியாதவர்களும் உள்ளனர்.

ஆனால், மக்கள் போராட வேண்டிய இடத்தில் வன்முறை தவிர்ந்த போராட்டங்களை நடத்துவது ஜனநாயக முறையுமாகும்.

தங்களது அரசியல் வளர்ச்சிக்காக காரணமின்றி, தர்க்க ரீதியான உண்மைகளேயின்றி சத்தமிடுவது அத்தனையும் மனித சக்தியை வீண்விரயமாக்கும் கருமம் தான். 

நியாயத்துக்கான போராட்டங்கள் இல்லாதுவிடின் அரசுகள், தனியார் துறையினர் தான்தோன்றித்தனமாகச் செயற்பட ஆரம்பித்துவிடுவர்.

நியாயங்களைப் பெற நல்ல உபாயங்களைத் தேடுக. போராட்டம் பொழுதுபோக்கு அல்ல.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .