2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 17/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலை நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான இரசிகர்கள் மண்டபத்தில் நிரம்பியிருந்தனர். நிகழ்ச்சிகள் சற்றுத் தாமதமடைந்ததால் இரசிகர்களின் கூச்சல் ஒருபுறம்.

அந்த நேரத்தில், நிகழ்ச்சியின் பிரதம விருந்தினரை மேடைக்கு அழைத்தார்கள். அவரும் பேச ஆரம்பித்தார். உரை சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால், இரசிகர்கள் கூக்குரல் எழுப்பி போ.. போ.. என்று கூறவும், அவரோ மேடையில் இருந்து இறங்கினார்.

இடம், சூழ்நிலை உணராமல் பேசக் கூடாது. என்னதான் ஒருவரின் உரை சிறப்பாக இருந்தாலும், ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் முன் பேசக் கூடாது.

நல்ல விடயங்களையும்  பேச வேண்டிய இடத்திலேயே பேச வேண்டும். 

குழந்தைகள் முன் வேதாந்தம் உரைக்கலாமா? முதியோருக்கு பாட்டி வடை சுட்டக் கதை சொல்லலாமா?

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X