Princiya Dixci / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சருகும் பசளையாகும். எனவே, 'என்னால் என்ன செய்ய முடியும்?' என, எந்தவொருவரும் சொல்லக்கூடாது.
உயிருடன் வாழ்பவர்கள், தோல்வியுடன் தூங்கி வழிந்து, விரக்தியினை விரும்பி ஏற்பது போல் பேசுதல், இறைவன் படைப்பினை நிந்திப்பது போலாகும்.
புற்கள் கூட மிதிபட்டு மிதிபட்டு, எழுந்து நிற்கின்றன. புல்லிலும் ஆற்றல் குறைந்தவர்களாக, மனிதர்கள் வாழக்கூடாது.
மயக்கத்துடன் முடிச்சுப் போட்டால் அது, ஒருவரைத் தன்வசப்படுத்த முயலும். துன்பம், நம்பிக்கையீனத்தை இடம் கொடுத்தலாகாது.
துன்பம் ஒரு தற்காலிக நிலை. விரக்தியுடன் வாழ்ந்து, அதனை நிரந்தர வாசஸ்தலமாக்கலாகாது.
வாழ வேண்டுமென்பதே வாழ்க்கை. அதனை வீழ்ந்திடாதல் நிறுத்துவது, ஒவ்வொருவரின் துணிச்சல். எழுபவனே வாழ்க்கின்றான்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .