2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 01/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 01 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல நண்பர்களிடையே பிரிவை உண்டாக்கச் சிலர், அவர்களிடையே பொய்களைப் புனைந்து சொல்லி நட்பை வெட்டிவிடத் துடிப்பார்கள்.

இச்செயல், பொறாமை காரணமாக மேற்கொள்ளும் செயல் என்று உடன் அறியும் மனோதிடம், நல்ல நட்புக்கு மட்டுமே உண்டு.

இன்று, அரசியலில் உள்ள நண்பர்களின் பிரிவுகளைச் சதிச்செயல் மூலம், சாதித்து முழுநாட்டையும் பாதிக்கும் நிலைகள் சர்வ சாதாரணமாகவே நிகழ்வுகளாகிவிட்டன.

எவரை நம்புவது என மக்கள்தான் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

நண்பர்கள் பிரிவது, அவர்களது இயலாமையையும் நட்பின் இறுக்கத்தின் தளர்வுமே காரணமாகும்.

பிறர்சொல் எதனையும் நம்புவது, வாழ்க்கையின் நெறிமுறைக்குத் தடையானது தான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .