Princiya Dixci / 2016 மார்ச் 02 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லோருமாக ஒன்று கூடி ஒருவனைத் தூற்றினாலும், அவனது சினேகிதன் அவ்வண்ணம் செய்தல் கூடாது.
துன்பம் வரும்போது, யாரோ ஒருவர் ஆறுதல் கூறினால் மனதில் தேறுதல் உண்டாகும்.
தேறுதலைச் சொல்லவேண்டிய நண்பனே, முகஞ்சுழித்து வெறுத்தால், அது நட்பாகுமா?
கெட்ட செயலை நண்பன் செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆனால், அதன்பொருட்டு வெறுத்து, அவனை ஒதுக்காமல் ஏற்ற நல்லவழிகளைச் சொல்லவேண்டுமல்லவா?
எதிர்பார்த்த உறவுகள் வெறுப்புடன் சென்றால் ஒருவருக்கு ஆதாரமாக நிற்பது, நட்பின் கடமையுமாகும்.
நட்பினால் ஒருவனை வழிநடத்துவது எளிது. துஷ்டர்களுக்கும் நல்ல நட்புக் கிட்டினால் கட்டாயமாகத் திருந்தியே உயர்வர்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .