Princiya Dixci / 2016 மார்ச் 03 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொய்க்கும் களவுக்கும் நெருங்கிய உறவு உண்டு. களவு செய்பவர்களைச் சமூகம் நேரிடையாகவே கண்டுகொண்டால், அவர்களைத் தாக்கி விடுகின்றது.
ஆனால், பொய் உரைப்பவர்களைக் கண்டுப்பிடிப்பதே சிரமமாக இருக்கும். பொய் உரைப்பவர்களில் நடிப்பும் பிரமாதமாக இருக்கம். களவு, பொய் ஆகியனவும் ஒரு விதத்தில் சமூகத்துக்கு எதிரான வன்முறைதான்.
இத்தகைய பேர்வழிகளுக்கு மனச்சாட்சியே இல்லை எனலாம். களவு செய்பவர்கள் கட்டாயம் பொய்பேசியே தீருவார்கள். தான் களவாடியதை எந்தத் திருடன் ஒப்புக்கொள்கின்றான்.
பிறர் பொருட்களைக் கவர்வது களவு என்றால், பிறர் வாழ்க்கையையே புரட்டிப்போட வைப்பது பொய் அல்லவா?
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .