Princiya Dixci / 2016 மார்ச் 04 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டிலிருந்து எமது நாட்டுக்கு வந்திருந்த ஒருவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இருந்த நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர் பற்றி பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அவர் சொன்ன விடயம் எனக்கு வியப்பை அளித்தது. மேலே குறிப்பிட்ட செல்வந்தரும் நண்பர்களாக ஒரே அறையில் பல வருடங்களாகத் தங்கியிருந்ததாக சொன்னார்.
அவர் மேலும் கூறியதாவது,
அப்போது எங்களுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒரு வேளை உணவுக்கே சிரமப்பட்டோம். சின்ன சின்ன வேலைகள் கிடைத்தால் கொஞ்சப் பணம் கிடைக்கும். பாண் சாப்பிட்டும் காலம் கழித்தோம்.
காலப்போக்கில் அவர் பெரும் செல்வந்தராகிவிட்டார். அத்தோடு எனது நட்பையும் துண்டித்துவிட்டார் என்றார்.
ஒரு சிலருக்கு வசதி வந்தால் நட்புக் கசக்கும். இது வெட்டுப்படவேண்டிய நட்புத்தான்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .