Princiya Dixci / 2016 மார்ச் 08 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுக்கு உதவிகளைச் செய்பவர்களை மட்டும் புகழ்வதும், உதவி செய்ய இயலாதவர்களை குறை சொல்வதும் ஏற்புடையதல்ல.
உதவி செய்வதற்கான வசதியும் தருணமும் எல்லா வேளையிலும் பொருந்தி வராது.
எனினும், எவருக்கும் எந்த நேரத்திலும் மன நிறைவுடன் உதவிபுரிவது மானுட தர்மமாகும்.
சிலர் தங்களுக்கு அனுகூலமான பணிகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகக் குற்றம் சுமத்துவதுமுண்டு. இது நல்லோர் மனதைப் புண்படுத்தும்.
மேலும், கண்டபடி பிறரை நாடுவது அநாகரிகமானது. ஒருவர் கேட்கும் உதவியை அவர்களால் செய்ய இயலாதுவிட்டால், அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக ஆகாது.
ஒருவரின் உண்மையான தகுதி அறியாது பெரும் உபகரணங்களைக் கேட்க முடியுமா?
முயற்சியேயன்றி தயக்கமின்றி உதவி கேட்பது வெட்கம்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .