2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 10/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த அமானுஷ்ய நடு இரவில், நான் விழித்துத் திடீரென வெளியே வந்தேன். இனம் புரியாத அமுக்கலான விசித்திர ஓசை, கேட்டும் கேளாத பெரிய சத்தம் போலவும் இருந்தது.

வெளியில் பார்க்கும் திசை எல்லாம் வெடித்து பறந்த துண்டங்களாய்த் தோன்றின. வர்ணங்கள் எல்லாமே கலந்த கலவை.

எங்குமே பீதியான காட்சிகள் தான். எனக்கு ஏன் பயமே வரவில்லை, இந்தப் பூமிக்கு என்னமோ நடந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டதா, நான் மட்டும் இப்படி எவ்வித நிர் சலனத்துடன் இயங்குகின்றேன்?

அந்த நேரத்தில் ஏதோ ஒரு மனித உருவம் மிதந்து என்னைக் கடக்கின்றது. 'ஏய் உன்னைத்தான்... சற்று நில். இங்கே வாவேன், இங்கு என்ன நடக்கின்றது? சொல்லிவிட்டுப் போ' எனக் கத்தினேன்.

'அட முட்டாளே, நீ எப்போவோ இறந்துவிட்டாயடா... அப்பனே' பதிலை எதிர்பாராது கேலியுடன் நகர்ந்தது.

ஒன்றுமே புரியாத படி... தனித்தபடி இந்தப் பிரளயத்தில் நான்...

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .