2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 06/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருட்டுக்குப் பெருமைகள் அதிகம். கும்மிருட்டு என்றால் பலருக்கும் பயம் அதிகம். பேய், பிசாசுகள் உலாவும் நேரம் இது என்பார்கள்.

ஆனால், இரவு நேரமே இனிதானது. ஓய்வுடன் மனிதன் நித்திரையினை இருளுக்குள் தேடுகின்றான்.

பொழுது போக்கு உல்லாசம் இரவுக்குள் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கின்றன. இருட்டில்தானே வண்ணத்திரையில் திரைப்படங்களைப்பார்த்து மகிழ்கின்றோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அகிலத்தின் ஜனனங்கள் உற்பத்திக்கான ஆரம்ப நடவடிக்கைகள் இரவில்தானே நடந்தபடி இருக்கின்றன.

சட்டவிரோத நடவடிக்கைகள் திருட்டுக்கள் எல்லாம் முன்னர் இரவுகளில் மட்டுமே நடந்தன. இன்றைக்கோ பட்டப்பகலில் பலர் அறிய அநியாயங்கள் அரங்கேறியபடியே இருக்கின்றன. கெட்டவர்கள் எந்தக் காலத்திலும் எதனையும் செய்வார்கள்.

எல்லாம் பொழுதும் நல்லவைதான். பொல்லாத மனசைத் துடைத்து எறிந்தால்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X