Princiya Dixci / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீறிவரும் சினங்கொண்ட வேங்கை போல், காலம் விரைந்தோடி விடுகின்றது. வருடங்கள் ஐம்பதைக் கடந்து, இன்று நான், எனது தாயகம் திரும்புகிறேன். கடந்த காலத்தின் பதிவுகளை மீட்கிறேன்.
அவள் சாதி வேறு, எங்கள் ஊரும் அல்ல. எனவே, எமது காதலை மறுத்த உறவுகளை வெறுத்து வேற்றூர் சென்று விட்டேன். என் காதலி, இப்போது எப்படி இருப்பாள். அதுவே எனக்கும் பரம திருப்தி. எப்படியோ அவளைத் தேடிப் பிடித்தேன். இப்போது, இவள் படுத்த படுக்கை. தனி மனுஷி.
திருமணமாகாமலேயே தன் உறவுகளுடன் இருந்து வந்தாள். என்னைக் கண்டவள், விழிகளை விரித்து மகிழ்ந்தாள். அது, ஓராயிரம் கதைகளுக்கு மேல், எப்படியும் வருவீர் என நான் அறிவேன் என்றவள், என் கரம் பற்றினாள். ஓரிரு நாட்களில், என் மடியில் மீளாத்துயில் கொண்டாள். வாழ்;;க்கை படுத்து உறங்கியது போல் இருந்தது.
நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நானும் திருமணம் செய்ததில்லை. பொங்கிவரும் காதலை அணைத்திட முயன்றாலும் குன்றாத அகல் விளக்காய் காதல் சுடர் விடும். உறவுகளின் எதிர்ப்பும் நாட்டின் சூறாவளியான மாற்றங்களும் காலத்தின் படுவேக ஓட்டமும் காதலைக் கலைத்துவிட முடியாது.
காதல் கனவு அல்ல. சாஸ்வதமான நனவு.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .