2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 18/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை என்பதெல்லாம், ஓர் ஆணுக்குச் சொல்லப்பட்டவை போல தெரிகின்றது.

பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் மூடத்தனமாக எண்ணும் மூடர்களால், பெண்கள் அவமதிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது.

ஆனால், இன்று உலகில் நடக்கும் விடயங்களைப் பார்த்தால், பெண் அடிமைத்தனத்தை விட, அவர்களுடன் மூர்க்கத் தனமாக மோதும், அரக்கர்களின் வம்சாவளி அராஜகங்கள் தான் மறையாமலிருக்கின்றன.

அந்த மரபணு மரிக்காமல், பெண் இனத்தின் புனிதத்தை மரிக்காமல், மிதிக்கும் காரியங்களைச் செய்கின்றது.

இன்னுமும், துஷ்டர்கள், தங்கள் செயலுக்கு வருந்துவதில்லை. இஷ்டத்துக்குக் கோர தாண்டவம் ஆடிய படியே இருக்கின்றார்கள். தண்டனைகளை அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் உளர்? சாட்சிகளை வைத்தா இவர்கள் குற்றங்களைச் செய்கிறார்கள்? சாட்சிகளையும் மடக்கி ஒடுக்கி விடுகிறார்கள்.

விழித்து எழாத உலகில்தான், நாம் இன்னுமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்காத உலகைக் கடவுளும் கண்டு கொள்ள மாட்டார்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .