2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 28/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தப் பெரிய உலகத்தையே மனிதர்கள் அதன் சுற்றும் திறனை, அசைவைத் தங்கள் அடாத செயல்களால் மாற்றியமைத்துக்கொண்டிருக்கின்றான்.

பூமியில் தற்போது நடக்கும் சகல மாற்றங்களுக்கும் காரணம் யார், புவி வெப்பமடைதலுடன், ஒழுங்காற்ற கட்டுமானப் பணிகளின் தாக்கங்களும் கூடி உலகத்தை உலுக்க ஆரம்பித்துள்ளன. 

இந்த இலட்சணத்தில் அணு ஆயுதப் பரீட்சைகள், இயற்கை வளங்களை சுரண்டுதல் போன்ற செயல்களை எந்தவித அச்சமின்றி மேற்கொள்ளும் அரசுகள், உலகம் ஒன்றுக்கும் அசையாது, அழியாது என எண்ணிக் கொண்டிருக்கின்றன.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே மாறும் தன்மையுடையன என்பதை இனியாவது புரிந்து கொள்வார்களா?, சூரியன் வெடித்துத் தானே கிரகங்கள் பிறந்தன.

இயற்கையைக் கௌரவித்தாலே அவை வாழும். பூமியை உடைப்பது அடுக்காத செயல்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X