2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 09/05/2016

Princiya Dixci   / 2016 மே 09 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தப் பெரிய பதவியும் பண பலமும் இருந்தாலும் கூட, வெட்கம் கெட்ட செயலைச் செய்தால், அவர்கள் உயிருடன் வாழும் நபர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். துஷ்டர்கள் வெட்கப்படுவதுமில்லை.

உலகத்துக்கு ஒவ்வாத எந்தச் செயலையும் கூசாமல் செய்வது வெட்கம் கெட்ட செயல்தானே. 

பணம், செல்வாக்கினால் தவறுகளை எத்தனைகாலம் தான் மறைக்க முடியும் சொல்லுங்கள்? மானத்தைக் காசு கொண்டு நீக்க முடியாது.

ஒருவரின் நடத்தைப் பிசகினால் ஏற்பட்ட வடுக்களை அவன் பின்னால் வந்த வாரிசுகளே மனம் நொந்து ஏற்க வேண்டி நேரிடும். இது தேவை தானா, இதனை உணர்ந்தால், மானம் கெட்ட செயல்களை ஒருவருமே செய்ய மாட்டார்கள்.

மனதில் பாரமின்றி வாழ்ந்திட நற்பழக்கங்களைப் பேணுதலே ஒரே வழியுமாகும். 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .