2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 10/05/2016

Princiya Dixci   / 2016 மே 10 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல பண்புகளுடன் வாழ்பவர்கள், தங்களை அறியாமல் செய்யும் சின்னத் தவறுகளையும் மிகப் பெரும் தவறாகக் கருதி மனம் நொந்து வெட்கத்தில் உறைந்து கொள்வார்கள்.

மனதளவில் எந்தவித வஞ்சனைகளும் இல்லாதவர்களுக்கும் பெரிய சோதனைகள் வரும். ஆனாலும் இத்தகையோர் இதன் பொருட்டுத் தன்னிலை மறந்து அறத்தை மறந்து போவதுமில்லை.

கால மாற்றத்தால் பல பெரியோர்கள், நலிவுற்றபோதும் பிறர் கரங்களை நாடாமல் இறுதியில் எவருக்குமே தெரியாமல் மறைந்தும்போன வரலாறுகள் உள்ளன.

கொடுக்கின்றவன் பிறர் உதவிகளைப் பெறவும் மாட்டான். 

உள்ளத்தில் திண்மையுடன் வாழும் நல்ல மாந்தர்கள் பொருளுக்கு அடிமைப்படுவதுமில்லை.

'கௌரவம்' அந்தஸ்து என்பது சான்றோருக்கே உரிமையானது. கண்டவரும் பெறவிளைவது நிந்திக்கத்தக்கது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .