2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 11/05/2016

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கண்டால், அவர்கள் நெஞ்சத்தில் கலவரங்களை ஏற்படுத்தும் வார்த்தைகளை கக்கிவிடுவது, சிலரின் வக்கிர குணமாக இருப்பதுண்டு.

நல்ல காரியத்தைச் செய்யும்போது கடுமையான குற்றச்சாட்டுக்களைப் புனைவது அல்லது அவர்கள் சார்ந்த நண்பர்கள், உறவினர்களைப் பற்றி வீணான வதந்திகளைச் சந்தோஷத்துடனும் சொல்லித் திருப்திப்படுவார்கள்.

பிறர் மனதில் வலியை ஏற்படுத்துவது இயல்பான குணமாகக் கொண்டவர்கள் அவர்கள், செயலுக்கான எதிர்விளைவினை அனுபவிக்கும்போது, தனக்கு  ஆறுதலூட்ட எவருமே இல்லையா என அழுத நொந்து வாழ்வார்கள்.

இரத்தம் ஓடும்போது அர்த்தமில்லாமல் கண்டபடி வாழ்பவர்கள், இரத்தம் வற்றும்போது சித்தம் கலங்கிப் பேதலிப்பதனால் ஏதுபயன்? 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .