2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 12/05/2016

Princiya Dixci   / 2016 மே 12 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்க் குரங்கிடம் குட்டிக் குரங்கு சொன்னது, 'அம்மா, எப்போதும் பக்கத்து மரத்திலிருக்கும் குரங்கு என்னைப் பார்த்து, நீ இந்த மனிதர்களை போல அழகற்றவனாகவே இருக்கின்றாய் எனக் கேலிசெய்கிறது' எனச் சொல்லி அழுதது.

அதற்குத் தாய்க் குரங்கு சொன்னது 'அதற்கு உன்மீது பொறாமை. நீதான் அழகான குரங்கு, அதுதான் மனுஷக் குரங்கு' என்று தனது குட்டியைத் தேற்றியது.

ஒவ்வொரு இனமும் தங்களது இனமே சிறப்பானதும் மிக அழகானதும் எனக் கருதலாம். ஆனால், அவை அழகு பற்றி, தங்கள் சிறப்புப் பற்றி என்ன கருதுகின்றது என எமக்குத் தெரியாது.

ஆனால், சகல ஜீவராசிகளுமே தமது இனங்களுக்கிடையே ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் இணைந்து வாழ்கின்றன.

மனித இனமோ வித்தியாசமானது. இவர்களுக்கு மதம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுடன் பணம், அந்தஸ்து பேதங்களும் உள்ளன.

என்ன மனிதர்கள் இவர்கள். வெட்கம். வெட்கம்...

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .