2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 17/05/2016

Princiya Dixci   / 2016 மே 17 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெருவில், பலத்த சப்தத்துடனும் எவரையோ ஏசியபடியும், கைகளை வீசியபடியும் நபரொருவர் சென்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட சிலர், பைத்தியம் பிடித்தநபர் என மிரண்டும் போயிருக்கலாம்.

உண்மையில், அவரது காதுகளில் அலைபேசியின் கேள்பொறி செருகப்பட்டிருந்தது. அவர், அதனூடாக யாரோ ஒருவரிடம் பேசியபடி, அபிநயத்துடன் போய்க்கொண்டேயிருந்தார்.

இத்தகைய காட்சிகளை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இத்தகைய செயல்கள், எமக்கு நகைப்பூட்டுபனவாயும் வெறுப்பூட்டுபனவாயும் அமையலாம்.

பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என சிலருக்குப் புரிவதில்லை. இது சுதந்திரபூமி எனவும் இத்தகைய சிலர் வாதாடலாம்.

எல்லோரும், அலைபேசியூடாகக் கத்தி, நடந்தால் இவர்கள் சத்தம் சஞ்சலத்தை ஏற்படுத்துமல்லவா? 

விஞ்ஞானக் கருவிகளால், மனிதனின் மெய்யுணர்வு மழுங்கலாகாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .