Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 29 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனின் மரணம் தொடர்பான வழக்கில் அவரின் மருத்துவரான கொன்ராட் முர்ரேவுக்கு நான்கு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மைக்கல் ஜக்ஸனின் நீண்டகால உறக்கமின்மை நோயை குணப்படுப்படுத்துவதற்காக அவருக்கு சக்திவாய்ந்த மயக்கமருந்தை அளவுக்கதிகமாக கொடுத்ததன் மூலம் ஜக்ஸின் மரணத்திற்கு காரணமானார் என டாக்டர் கொன்ராட் முர்ரே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் அவர் குற்றவாளி என இம்மாத ஆரம்பத்தில் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள நீதிமன்றமொன்று அறிவித்தது.
இவ்வழக்கின் சாட்சியங்கள் முர்ரேயினால் தொடர்ச்சியாக பொய்யும் ஏமாற்றுகளும் மேற்கொள்ளப்பட்டதை வெளிப்படுத்தியதாக நீதிபதி மைக்கல் பாஸ்டர் கூறினார்.
இந்நிலையில் 58 வயதான டாக்டர் கொன்ராட் முர்ரேவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நான்கு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜக்ஸின் தாயாரான கத்தரின் உட்பட அவரின் குடும்பத்தினர் பலர் நீதிமன்றுக்கு சமுகமளித்திருந்தனர்.
மைக்கல் ஜக்ஸன் 2009 ஏப்ரல் 25 ஆம் திகதி உயிரழந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே மைக்கல் ஜக்ஸினின் பிரத்தியேக மருத்துவராக கொன்ராட் முர்ரே இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கலிபோர்னியா சிறையின் இடநெருக்கடி காரணமாக கொன்ராட் முர்ரே தனது தண்டனைக் காலத்தின் அரைப்பகுதியையே சிறையில் கழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 minute ago
20 minute ago
32 minute ago
rohan thamapapillaia Wednesday, 30 November 2011 04:43 PM
திங்க்ஸ் ஒப் திஸ் நேச்சர் ஸுட் ஹப்பன் இன் ஸ்ரீ லங்கா.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
32 minute ago