2024 ஜூன் 17, திங்கட்கிழமை

ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது குறித்து மகிழ்ச்சி: யுவ்ராஜ்

A.P.Mathan   / 2012 ஜூன் 05 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று தற்போது அதிலிருந்து மீண்டு வரும் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் மீண்டும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடிவது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு யுவ்ராஜ் சிங் மீண்டும் இந்திய அணி சார்பாக விரைவில் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது குருதிப் பரிசோதனைக்குரிய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த யுவ்ராஜ் சிங், தான் நல்ல நிலையில் காணப்படுவதாகவும், ஆரோக்கியமான சாதாரண வாழ்வை வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு இது கொண்டாடப்படக்கூடிய ஒரு விடயம் எனவும் தெரிவித்தார்.

கடந்தாண்டு உலகக்கிண்ணத்தை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த யுவ்ராஜ் சிங்கின் இந்தக் கருத்து அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்ற பின் அவர் எப்போது மீண்டும் போட்டிகளில் பங்குபற்றுவார் என்ற பரவலான எதிர்பார்ப்புக் காணப்படும் நிலையில் அவரது இந்தக் கருத்து அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் உடற்பயிற்சிக் கூடத்தில் தானும், இஷாந்த் சர்மாவும் பயிற்சிகளில் ஈடுபடும் புகைப்படத்தையும் யுவ்ராஜ் சிங் வெளியிட்டிருந்தார்.

கடந்தாண்டு இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்குபெற அணியில் சேர்க்கப்பட்டிருந்த யுவ்ராஜ் சிங் அத்தொடரில் காயமடைந்து நாடு திரும்ப வேண்டி ஏற்பட்ட நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட யுவ்ராஜ் சிங் கடந்த ஏப்ரல் மாதம் பெரிய வரவேற்புக்கு மத்தியில் இந்தியாவைச் சென்றடைந்திருந்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X