2024 ஜூன் 17, திங்கட்கிழமை

டனிஷ் கனேரியாவைத் தடை செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

A.P.Mathan   / 2012 ஜூலை 11 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பொட் ஃபிக்சிங்கில் கொண்டிருந்த தொடர்பு காரணமாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபையால் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டனிஷ் கனேரியாவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் தடை செய்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடாத்தப்படும் எந்தத் தொடர்களில் டனிஷ் கனேரியா பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டியொன்றில் சக வீரரை ஸ்பொட் ஃபிக்சிங்கில் பங்குபற்றத் தூண்டியமை காரணமாகவும், அந்த வீரரை சூதாடி ஒருவரிடம் அறிமுகப்படுத்தியமை காரணமாகவும் டனிஷ் கனேரியா இங்கிலாந்துக் கிரிக்கெட் சபையால் ஆயுட்காலத் தடைக்குட்படுத்தப்பட்டார். எசெக்ஸ் அணிக்காக கனேரியா போட்டிகளில் பங்குபற்றிய போது சக வீரரான மேர்வின் வெஸ்ட் பீல்டை ஸ்பொட் ஃபிக்சிங்கிற்குத் தூண்டியதே அச்சம்பவமாகும்.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்தண்டனையை எதிர்த்து கோரவுள்ளதாக டனிஷ் கனேரியா தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் அவர் உத்தியோகபூர்வமாக அதனைச் செய்திருக்கவில்லை.

இந்நிலையில் அவர் உத்தியோகபூர்வமாக தனது முடிவுக்கு எதிராக கோரிக்கை விடுத்து அதில் அவர் வெற்றிபெறும் வரை அவர் தடை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சார்பாக டனிஷ் கனேரியா இறுதியாக 2010ஆம் ஆண்டே சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய போதிலும், உள்ளூர்ப் போட்டிகளில் இதுவரை பங்குபற்றி வந்தார். இந்தத் தடை அவரது கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய தடைக்கல்லாக அமையும் எனக் கருதப்படுகிறது. அவருக்குத் தற்போது 31 வயதாகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X