2024 ஜூன் 17, திங்கட்கிழமை

வடகொரிய ஜனாதிபதி திருமணமானவர்: அரச ஊடகம் முதல் தடவையாக அறிவிப்பு

Super User   / 2012 ஜூலை 25 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்  உன் திருமணமானவர் என்பதை வடகொரிய ஊடகங்கள் முதல் தடவையாக உறுதிப்படுத்தியுள்ளன.

வடகொரிய ஜனாதிபதியாகவிருந்த கிம் ஜோங் இல் கடந்த டிசெம்பர் மாதம் காலமானதையடுத்து அவரின் மகனான கிம் ஜோங் உன் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஆனால் கிம் ஜோங் உன்னின் வயது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அண்மைக்காலமாக வைபவங்கள் பலவற்றில் அவருடன் பெண்ணொருவர் காணப்பட்டபோதிலும் அப்பெண் ஜனாதிபதியின் பாரியாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று புதன்கிழமை தலைநகர் பியோங்யாங்கில் உல்லாச பூங்காவொன்றின் திறப்பு விழா குறித்த அரச தொலைக்காட்சி செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் குறித்து முதல் தடவையாக தகவல் வெளியிடப்பட்டது.

"நுங்க்ரா மக்கள் களியாட்ட பூங்காவின் திறப்பு விழாவில் மார்ஷல் கிம் ஜோங் உன், தனது மனைவியான தோழர் றீ சோல் ஜூ சகிதம், கலந்துகொண்டார்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கிம் ஜோங் உன் எப்போது திருமணம் புரிந்தார் எங்கு திருமணம் நடைபெற்றது என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஜோங் உன்னின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி கிம் ஜோங் இல் தனது 17 வருட கால ஆட்சியில் ஒரு தடவை மாத்திரமே பகிரங்க உரையாற்றியதுடன் அரிதாகவே வைபவங்களில் கலந்துகொண்டார் . ஆனால்  கிம் ஜோங் உன்  தனது தந்தையைப் போலல்லாமல் அவரின் அடிக்கடி வைபவங்களில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X