2024 மே 26, ஞாயிற்றுக்கிழமை

பிரபல நகைச்சுவை நடிகர் ஜஸ்பால் பட்டி விபத்தில் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஜஸ்பால் பட்டி இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஜலன்டிஹார் நகரத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார். 

57 வயதான இவர் பவர்கட் என்னும் தனது புதிய பட விழாவில் பங்கேற்பதற்காக  மொகாவிலிருந்து ஜலன்டிஹாருக்கு சென்றுகொண்டிருந்தபோது, இவரின் கார் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1980 களில் நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமான இவர், 1990 களில் தொலைக்காட்சி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பல ஹிந்தி மற்றும் பஞ்சாப் படங்களிலும் நடித்துள்ளார்.

காரை செலுத்திச்சென்ற பட்டியின் மகனும் இத்திரைப்படத்தின் நடிகை சுரில் கௌதமும் காயமடைந்துள்ள நிலையில் ஜலன்டிஹார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .