2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

டயனாவை இங்கிலாந்து இராணுவம் கொன்றுவிட்டதா?

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸின் முன்னாள் மனைவியும், இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோரின் தாயுமான இளவரசி டயானா கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீஸ் நகரில் வீதி விபத்தொன்றில் கொல்லப்பட்டிருந்தார்.

இளவரசர் சார்ல்ஸுடனான மணவாழ்வை முறித்துக் கொண்டு, டோடி ஃபயத் என்னும் எகிப்திய வணிகப் பிரமுகருடன் காதல் கொண்டிருந்த டயானாவை இங்கிலாந்து அரசக் குடும்பமே திட்டமிட்டுக் கொன்று விட்டதாக அப்போது பேசப்பட்டது.

ஆயினும், விபத்து நிகழ்ந்த நாடான ஃபிரான்ஸின் விசாரணை அறிக்கைப் படி, ஓட்டுநர் மது அருந்தியபடி வாகனத்தை அதிவேகத்தில் செலுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் விசாரணை அறிக்கையும் பின்னர் இத் தகவலையே உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், இங்கிலாந்து இராணுவ வீரரொருவரின் மனைவி வாயிலாக டயானாவின் மரணம் இங்கிலாந்து இராணுவத்தின் திட்டமிடப்பட்ட ஒன்றே என்று செய்தி வெளியாகியுள்ளது.

தன் கணவரை விட்டுப் பிரிந்துள்ள அந்த மனைவி, தன் கணவர் இராணுவத்தில் இருந்த போது, இந்தச் சதிச் செயல் குறித்து தன்னிடம் தெரிவித்திருந்தார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

அரசக் குடும்பத்தாரின் உத்தரவின்படி டயானாவை இங்கிலாந்து இராணுவத்தினர் கொன்று விட்டனர் என்று அந்த இராணுவ வீரர் தன் மனைவியிடம் இரகசியம் கூறி வைத்திருந்ததாகத் தெரிகிறது.

இச்செய்தி வெளிவந்ததையடுத்து, அந்த இராணுவ வீரரின் மனைவியிடம் இங்கிலாந்து காவல்துறை மேலும் விசாரணை செய்து வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X