2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

Kogilavani   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக் குறைப்பாடுக் காரணமாக தனது 65 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை (25) இரவு காலாமானார்.

கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று  வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X