2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஆபத்தான நிலையில் மைக்கல் ஷுமாக்கர்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபோர்முலா 1 வரலாற்றில் வெற்றிகரமான வாகன ஓட்டியான மைக்கல் ஷுமாக்கர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
44 வயதான மைக்கல் ஷுமாக்கர், 2012ஆம் ஆண்டு ஃபோர்முலா 1 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
தனது மகனுடன் இணைந்து பிரெஞ்சு அல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மைக்கல் ஷுமாக்கர் விழுந்து தலையில் பாறையொன்றுடன் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
விபத்தினைச் சந்தித்ததைத் தொடர்ந்து அவர் நினைவுடன் காணப்பட்ட போதிலும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் அங்கு தனது நினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
 
அவரது தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், அதிர்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், விபத்தின் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X