2025 ஜூலை 30, புதன்கிழமை

மகள்களுடன் நீச்சலுடையில் ஸ்ரீதேவி

A.P.Mathan   / 2014 ஜனவரி 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிகினி உடை அணிந்து குடும்பத்துடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடினார் நடிகை ஸ்ரீதேவி. நீச்சல் உடையில் அவரும், மகள்களும் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பங்களாவில் கணவர் போனிகபூருடன் வசித்து வருகிறார் ஸ்ரீதேவி. அவருடன் மகள்கள் ஜான்வி, குஷியும் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ஸ்ரீதேவி பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். தீ விபத்தால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவியும் அவரது மகள்களும் டென்ஷனாகவே இருந்தனர். 
 
அவர்களை ரிலாக்ஸ் ஆக்கும் வகையிலும், புத்தாண்டை கொண்டாடும் வகையிலும் கணவர் போனிகபூர் வெளிநாடுக்கு அழைத்து சென்றார். கடற்கரை பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய அவர்கள் படகு சவாரி செய்தனர். பிறகு ஸ்ரீதேவியும் மகள்களும் நீச்சல் உடை அணிந்து கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். இவர்கள் நீச்சல் உடையுடன் இருக்கும் காட்சி இணையதளத்தில் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (தினகரன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .