2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஒருநொடியில் பிரபலமான இந்தியர்

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லாவை ட்;விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா பொறுப்பேற்றுள்ளார். ஒரு இந்தியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஆகியிருப்பது இதுவே முதல் முறை. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் நாதெல்லாவை பார்த்து பெருமை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து நாதெல்லா நேற்றுதான் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக அவரை ட்விட்டரில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது சிஇஓ ஆன பிறகு அவர் ட்வீட் செய்த பின்னர் 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக 40 ஆயிரம் பேர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

தற்போது அவரை மொத்தம் 1 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள், தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள், பிரபலங்கள், மாணவர்கள் என்று ஏராளமானோர் தற்போது அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள சத்யா நாதெல்லாவின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி ஆகும். இதுதவிர அவருக்கு பிற சலுகைகளும் கிடைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து பணிபுரியும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா அந்த நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள அவரின் வருடாந்திர சம்பளம் ரூ.112 கோடி ஆகும். அதில் போனஸ் மட்டும் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இது தவிர அவருக்கு நிறுவனத்தின் பங்குகள் மூலம் 13.2 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். ஆக மொத்தம் அவரது சம்பளம் 18 மில்லியன் டொலர் அதாவது ரூ.112 கோடி. ரொக்கமாக வழங்கப்படும் போனஸ் 0 முதல் 300 சதவீதம் வரை நாதெல்லாவுக்கு வழங்கப்படும். ஆனால் அவரது வேலையை பார்த்து போர்டு உறுப்பினர்கள் தான் போனஸ் சதவீதத்தை முடிவு செய்வார்கள். நாதெல்லாவுக்கு கடந்த ஆண்டு 1.6 மில்லியன் டாலர் போனஸ் கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர் மற்றும் டூல்ஸ் பிசினஸ் பிரிவு தலைவராக இருந்த நாதெல்லாவுக்கு கடந்த 2013ஆம் நிதியாண்டில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 096 சம்பளமாக கிடைத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X