Gavitha / 2015 மே 05 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லோட் எலிசபத் டயானா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லோட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், ஸ்கொட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேத் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 29-04-2011 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு கடந்த 22-07-2013 அன்று முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தை இளவரசர் ஜார்ஜ் என்ற பெயரில் வளர்ந்து வருகிற நிலையில், இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு அரச குடும்பம் என்ன பெயர் வைக்கும்? என்பது தொடர்பாக அந்நாட்டு மக்களிடையே பல்வேறு யூகங்கள் நிலவிவந்த வேளையில், அந்தப் பெண் குழந்தைக்கு சார்லோட் எலிசபத் டயானா என இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லோட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி, குட்டி இளவரசியை பெற்றெடுக்கவில்லை. மாறாக வாடகைத் தாய் பெற்றதாக ரஷ்ய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் குழந்தையை பெற்றெருத்த கேட், மாலை 6 மணியளவிலேயே அவர் குழந்தையுடன் அரண்;மனைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரஷ்ய செய்தித்தாளும் அந்நாட்டு மக்களும் வேறு விதமாக பேசுகிறார்கள்.
பெண் குழந்தையை பெற்றெடுத்தது கேட் இல்லை. வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையுடன் தான் கேட் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குட்டி இளவரசி கடந்த சனிக்கிழமை பிறக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தையை கடந்த சனிக்கிழமை பிறந்ததாக பொய் சொல்லி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் என்றும் ரஷ்ய மக்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் கேட் அவ்வளவு தெம்பாகத் தெரிய வாய்ப்பே இல்லை. அப்படியே அவர் அந்த குழந்தையை பெற்றிருந்தால் அதை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ரஷ்ய பெண்கள்.
குழந்தையை பார்த்தால் அன்று பிறந்தது போன்று இல்லை. அது நிச்சயம் பிறந்து குறைந்தது மூன்று நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். என்னதான் உலகின் சிறந்த மருத்துவர்கள் கேட்டுக்கு பிரசவம் பார்த்தாலும் குழந்தையை பெற்றெடுத்த சில மணிநேரத்தில் ஹைஹீல்ஸில் இவ்வளவு தெம்பாக நடக்க முடியாது என்று மேலும் சிலர் கூறியுள்ளனர்.
வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. கேட் மிடில்டன் கர்ப்பமாக இருந்ததாக நடித்துள்ளார். பக்கிங்காம் அரண்மனை தியேட்டரில் இருந்து வந்துள்ள நல்ல நடிகை கேட். அவர் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்று ரஷ்யர்கள் குமுறுகிறார்களாம்.


26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025