2025 மே 15, வியாழக்கிழமை

கவர்ச்சி கலண்டருக்கு போஸ் கொடுப்பதற்காக 300 கால்பந்து வீராங்கனைகள் போட்டி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியில் 12 சிறப்புப் பரிசுகளை வெல்வதற்காக நொக்கவுட் கால்ப்பந்தாட்டச் சுற்றுபோட்டியொன்றில் 300 இற்கும் மேற்பட்ட பெண்கள் தீவிரமாக போட்டியிட்டனர். கவர்ச்சி கலெண்டர் ஒன்றின் 12 பக்கங்களிலும் தோன்றுவதற்கான வாய்ப்பே இந்த பரிசாகும்.

இக்கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய அணைத்து பெண்களும் ஜேர்மனியில் உள்ள அமெச்சூர் கால்பந்தாட்ட கழங்களில் விளையாடும் வீராங்கனைகளாவர். இப்போட்டிகளில் இறுதியாக தெரிவுசெய்யப்படும் 12 வீராங்கனைகள் பிரேங்கபர்ட்டில் உள்ள வோல்ஸ்பேங்க் அரங்கில் தமது திறமைகளை காண்பித்துள்ளனர்.

குறித்த கலண்டரானது மகளிர் கால்பந்தாட்டம் மீதான ஈர்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் அதிகமான ஊடகங்களையும் வரவழைப்பதற்கு உதவும் என இதன் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட வீராங்கணைகள் இப்போது தமது ஆண்கள் பாணி தோற்றத்தை கைவிடுகிறார்கள் என ஜேர்மன் தேசிய கால்பந்தாட்ட அணியின் வீராங்கனைகளில் ஒருவரான ஜுலியா சிமிக் கூறியுள்ளார். இவர்  அண்மையில்  தனது சகாக்களுடன் பிளேபோய் பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ்களை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'இந்த விம்பத்திலிருந்து விடுவதற்கான எங்களது வழியில் நாங்கள் முன்னேறி செல்கிறோம்  என நான் எண்ணுகிறேன். மேலும் மேலும் அதிக அழகான பெண்கள் விளையாடுகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .