2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பன்றி இறைச்சியால் உயிர்வாழும் பாட்டி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மூத்த பெண்மணி எனக் கருதப்படும் நியூயோர்க்கை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தான் தினமும் காலை உணவாக பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியை சாப்பிடுவதால் தான் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி உள்ளிட்ட பாக்கெட் உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவின் அடிப்படையிலே உலக சுகாதார நிறுவனம் இக்கருத்தை தெரிவித்திருந்தது.

ஆனால், இந்தக் கருத்து முற்றிலும் தவறானது எனத் உலகின் மூத்த பெண்மணி எனக் கருதப்படும் சூசானா, தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் சூசானாவுக்கு  தற்போது 116 வயதாகிறது.

 இவர் தினந்தோறும் காலை உணவாக பதப்படுத்த பன்றி இறைச்சி வகையான பேக்கன்களையே சாப்பிட்டு வருகிறாராம். ஆனால், தான் ஆரோக்கியமாக வாழ்வதாகவும்  உலக சுகாதார நிறுவனம் கூறுவது போல் நோய்த் தாக்குதல் எதுவும் தனக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் தனது நீண்ட ஆயுளுக்கு காரணம், திருமண பந்தத்தில் நீடிக்காததும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாததும் தான் எனக் கூறுகிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .