Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 21 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெல்ஜியத்தில் தேர்தல் நடைபெற்று 249 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை அரசாங்கம் ஒன்று அமைக்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பலர் தங்களது ஆடைகளை களைந்து விட்டு உள்ளாடைகள் மாத்திரம் அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெல்ஜியத்தில் பிரதம மந்திரி யூவ்ஸ் லெட்டர்மி பதவி விலகி 249 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் அங்கு புதிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை.
பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் அரசாங்கம் அமைப்பதற்காக கட்சிகளிடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இழுபறிபட்டு நீண்டு செல்கின்றன.
இதனால் உலகில் அதிக நாட்கள் (249) அரசாங்கம் இல்லாதிருந்த நாடாக பெல்ஜியம் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கெந்த் நகரில் அதே எண்ணிக்கையான மக்கள் இணைந்து தங்களது ஆடைகளை களைந்துவிட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெல்ஜியத்தின் மற்ற நகரங்களில் சிப்ஸ், பெல்ஜியத்தின் தேசிய உணவு போன்றவற்றை இலவசமாக வழங்கி கவனத்தை ஈர்த்தன.
பிரெஞ்ச் மொழி பேசுகின்றவர்கள் வாழும் நகரமான லூவெய்ன் லா நேவியூவில் இலவசமாக பெல்ஜிய பியர்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளுக்கான தகவல்கள் குறுந்தகவல், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவை மூலம் பரப்பப்பட்டன.
கடந்த ஜுன் மாதம் தேர்தல் நடந்து 8 மாதங்களாகிவிட்ட போதிலும் மொழி ரீதியாக பிரிந்துள்ள கட்சிகளிளால் அரசாங்கம் அமைப்பதற்கான கூட்டணியொன்றை அமைப்பதற்கு முடியாமலுள்ளது.
அண்மையில் புதிய அரசாங்கம் அமைக்கும்வரை, பெல்ஜிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் தடைவிதிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளை அந்நாட்டு பெண் நாடாளுமற்ற உறுப்பினர் ஒருவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Tuesday, 22 February 2011 09:24 PM
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!
கூட்டத்தில் இருப்பவர்களது கண்கள் நிலை குத்தி பார்வை மேல்நோக்கி இருக்குமா, மரண அவஸ்தை & உலக இறுதி நாளில் போல?
Reply : 0 0
TAMILSALAFI.EDICYPAGES.COM Wednesday, 23 February 2011 10:19 PM
இதே போன்று மத்திய கிழக்கில் தற்போது கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் நடந்து கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.
போகின்ற போக்கை பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
37 minute ago
39 minute ago