2025 மே 15, வியாழக்கிழமை

மொடல் அழகியின் மார்பகத்தை கடித்த பாம்பு விஷமேறி உயிரிழப்பு

Kogilavani   / 2011 மார்ச் 15 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொடல் அழகியொருவரின், சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கப்பட்ட மார்பகத்தை எதிர்பாராவிதமாக கடித்த பாம்பொன்று நச்சுத் தன்மையால்  உயிரிழந்துள்ளது.
 
இஸ்ரேலிய மொடல் அழகியான ஒரிட் பொக்ஸ் என்பவர் ஸ்பெனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டபோது,  பாம்மை கையில் பிடித்து அதனது முகத்தை முத்தமிடுவதற்கு முயன்றுள்ளார்.

ஆனால், அந்த பாம்பானது ஆத்திரமடைந்து மொடல் அழகி பொக்ஸின் பெரிய மார்பை கவ்விக்கொண்டது.

 

ஓரிட் பொக்ஸ் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துக் செல்லப்பட்டார். ஆனால் அவர் நீண்ட கால விபத்தை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை கடித்த பாம்பு உயிரிழந்துள்ளது. ஓரிட் பொக்ஸின் மார்பகங்களை  பெரிதாக்குவதற்காக சத்திரசிகிச்சை மூலம் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலிக்கனை பாம்பு கடித்ததால் பாம்பின் உடலில் விசமேறியதே இதற்குக் காரணமாம்..

இஸ்ரேலில் பொக்ஸ் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள பல தடவை சத்திரசிகிச்சை செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 15 March 2011 11:04 PM

    வினோதம் ஆனால் எனது கவலை இது:
    இவர் தாயாக மாட்டாரா, தாயாகும் தகுதியை இதன் மூலம் இழந்துவிட்டாரென்று தெரிகிறது பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பாரோ தெரியாது ஆனால் இவ்வளவு நஞ்சை உடலில் வைத்துக்கொண்டு எப்படி வாழ்வாரோ? அழகு உயிரை எடுக்கவா, உயிர் கொடுக்கவா?

    Reply : 0       0

    xlntgson Wednesday, 16 March 2011 08:14 PM

    இவர் தாய்மையை அடைந்தால் எப்படி பாலூட்டுவார்?

    Reply : 0       0

    jaliyath Thursday, 17 March 2011 07:51 PM

    இவர்கள் போன்ற பெண்களால் பெண்குலத்துக்கு இழிவு

    Reply : 0       0

    CiddEEQUE Monday, 28 March 2011 07:27 PM

    சாதனை படைக்க எண்ணுபவர்கள் இவர்களே! அதற்காக இப்படியா. ஒரு துளி விஷம் ஒரு பால் குடத்தை விசமாக்கும் என்பது போல், இவள் ஒருத்தியால் உலகில் உள்ள அனைத்து பெண்ணினமும் பழியாகுவது பரிதாபமே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .