2025 மே 15, வியாழக்கிழமை

காதலரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய பெண் மீது வழக்கு

Kogilavani   / 2011 மார்ச் 21 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

நான்கு குழந்தைகளின் தாயான மரியா டொப் எனும் இந்த பெண் மார்டின் டக்ளஸ் (வயது 45) என்பவரின் விதைப்பகுதியை கடித்து காயப்படுத்திதியுள்ளார்.

அதிகாலை வேளையில் ஏற்பட்ட மோதலொன்றின்போது,  ஏற்பட்ட இச் சம்பவத்தையடுத்து மார்டின் டக்ளஸ் அவசர சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கடும் வலிக்கு மத்தியில் 999 என்ற அவசர சேவை இலக்கத்துடன் தொடர்புகொண்டு  தனது  நிலையை தெரிவித்தார். ஆனால், ஆரம்பத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதை தொலைபேசியில் பதிலளித்தவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதிருந்ததாம்.

பின்பு  நியூகாஸல் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு மருத்துவர்கள் விரைந்தனர். வைத்தியசாலையில் மார்ட்டின் டக்ளஸுக்கு அவசர சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

அதேவேளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து  டக்ளஸின் காதலியான மரியா டொப் கைது செய்யப்பட்டார்.

மரியா டொப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேற்படி சம்பவத்தில் டக்ளஸின் கைகளிலும் காயமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்  தனது காயங்கள் மாறும் வரை பல நாட்களை வைத்தியசாலையில் கழித்தார்.

மரியா டொப் மீதான வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 22 March 2011 08:56 PM

    ஆண்கள் உரிமைக்காக போராடுவதெப்படி? பெண்கள் ஆண்களை விஷம் கொடுத்துக் கொல்வதும், தூக்கத்தில் கழுத்தறுப்பதும் இந்த சம்பவத்தில் போல வஞ்சித்துக் கொல்வதும் (கொலை முயற்சி?) ஏகமாக நடக்கின்றது. அந்தக் காலத்தில் மொட்டையடித்து செம்புள்ளி கரும்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி நாற்ற முட்டி உடைத்து தண்டிக்கப்பட்டது இதனாலேயே என்று தெரிகிறது! மரண தண்டனையில் நின்றும் விலக்களிக்கப்பட்டனர் எனக் காணப்படுகிறது, சிறு பிள்ளைகளை பராமரிக்கவேண்டியதால்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .