Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 நவம்பர் 16 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
விரல் நுணி துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் விரலை வைத்தியர்கள் இணைந்து அவனது வயிற்றில் பொருத்தி விரலுக்கு உயிரோட்டம் கொடுத்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தளபாடங்கள் உற்பத்தி செய்பவாரன வாங் யோங்ஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு விரல் நுணி துண்டிக்கபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் லயோனிங் மாகாணத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞன் தனது தொழிலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக மின்சார விபத்தில் சிக்கி தனது நடுவிரல் நுணி துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதன்போது, வைத்தியர் ஹுவாங் செயிங், மேற்படி இளைஞனின் நடுவிரல் நுணியில் உள்ள தசை மற்றும் தோல் முற்றாக வெட்டப்பட்டு விரலின் எழும்புகள் வெளியில் தெரிகின்றன. இதற்கு நாங்கள் மிக வேகமாக முடிவெடுக்காவிட்டால் அவ்விளைஞன் தனது விரலையே இழக்க வேண்டி ஏற்படும். அதனால் நாங்கள் அவனது வயிற்றுப்பகுதியில் குறித்த விரலை பொருத்துவதற்கு நினைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு உடனடியாக வைத்தியர்கள் வாங்கிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்டு வயிற்றுப் பகுதியில் அவரது விரலை பொருத்தியுள்ளனர். இதனூடாக அவ்விளைஞனின் விரல் நுணியின் தசை மற்றும் தோல் பகுதி வளர்ந்து விடுமென வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சத்திரசிகிச்சையானது வெற்றிகரமாக முடிந்துவிட்டது. வாங்கின் வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள விரலை இன்னுமொரு மாதத்தில் பிரித்துவிடலாம் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago