2025 மே 14, புதன்கிழமை

போட்டோ ஷொப் மூலம் நீச்சல் தடாகம் 'நிர்மாணித்த' மேயர் நெருக்கடியில்

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஊழல் குற்றச்சாட்டை முறியடிபப்தற்காக, பகுதியளவு மாத்திரம் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகமொன்றில், சுற்றுலா பயணிகள் நீச்சலடிப்பதுபோல் போட்டோ ஷொப் மூலம் காட்சியொன்றை வடிவமைத்து அறிக்கை தயாரித்த நகர மேயர் ஒருவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

ருமேனியாவின் பிஹோர் நகர மேயரே இத்தகைய நெருக்கடியில் சிக்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்கொடையாக கிடைத்த 1.4 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதி முறையாக பயன்படுத்தப்பட்டது எனக் காட்டுவதற்காக அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

10 ஹெக்டேயர் பரப்பளவான காணியில் நவீன நீச்சல் தடாகங்கள், வாகனத் தரிப்பிடங்கள், விளையாட்டுத் திடல்கள் உட்பட பல வசதிகள் கொண்ட பொழுதுபோக்கு கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தடாகத்திலுள்ள நீரில் பிரதிபலிக்கும் வானம் மிகத் தெளிவாகவும் படத்தில் பின்னணிச் சூழல் பிரகாசமில்லாமலும் இருப்பதை அவதானித்த ருமேனிய சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையின்போது, இந்நீச்சல் தடாகம் முழுமையாக நிர்மாணிக்கப்படவில்லை என்பதும் அவர்வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என்பதும் விசாரணை மூலம் தெரியவந்தது. அந்த நீச்சல் தடாகத்துடன் நீர் கொண்டுவரும் குழாய்களோ, வடிகாலமைப்புகளோ இணைக்கப்படவுமில்லை என கண்டறியப்பட்டது.

தற்போது மேற்படி மேயர் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .