2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆபாச வீடியோ தயாரித்த ஆறாம் வகுப்பு மாணவர்கள்

Kogilavani   / 2012 மே 12 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிகோவிலுள்ள பாடசாலையொன்றில் 6 ஆம் தரத்தில் கல்விப் பயிலும் மாணவர்களால் ஆபாச வீடியோக் காட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கம்பெச் மாநிலத்தின் கல்கினி நகரிலுள்ள பாடசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 மாணவர்கள் இணைந்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் காட்சிகள் நான்காவது மாணவர் ஒருவரினால் செல்லிடத் தொலைபேசி வீடியோவில்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வீடியோவை இணைத்தளமொன்றில்  அவதானித்த, மேற்படி சிறுவர்களில் ஒருவரின் தாய் இதுகுறித்து  அதிகாரிகளிடம் முறையிட்டதாக கம்பெச் மாநில கல்வித் திணைக்களத்தின் பேச்சாளர் ஒமர் கென்டன் தெரிவித்துள்ளார்.

'மேற்படி வீடியோக் காட்சியானது குறித்த பாடசாலையில் வெற்று வகுப்பறையொன்றில்  எடுக்கப்பட்டுள்ளது.  மேற்படி வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையானவை. இவ்விடயம் தொடர்பில் கல்வித் திணைக்களமானது மிகுந்த கவலையடைந்துள்ளது. இச்சம்பவத்தில் பெரியவர்கள் எவரேனும் தொடர்புபட்டுள்ளனரா என்று ஆராய்வதற்காக கல்வித் திணைக்களம், மற்றும் ஆசிரியர் சங்கங்கள் என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன' என அவர் கூறினார்.

வீடியோ பதிவுசெய்யப்படும்போது வகுப்பறையில் ஆசிரியர்கள் எவரும் இருந்ததாகத் தெரியவில்லை என கென்டன் தெரிவித்துள்ளார். 

மேற்படி  மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.  ஆனால் அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாணவர்களின் வயது விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் மெக்ஸிகோவில் 6 ஆம் தரத்தில் பொதுவாக 12 வயதுக்குட்பட்ட மாணவர்களே கல்விகற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X